அஜித்தால் இணைந்த வெற்றி கூட்டணி

697

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டது!
இந்நிலையில்  தற்போது வந்துருக்கும் புது தகவல் என்வென்றால் கௌதம் மேனன் தனது வெற்றி கூட்டணியான ஹாரிஸ் ஜெயாராஜ் உடன் மீண்டும் இணைத்துள்ளார் .
                          மின்னலே,காக்க காக்க,வாரணம் ஆயிரம் போன்ற பல படங்களில் சேர்ந்து வேலை செய்த கௌதம்-ஹாரிஸ் கூட்டனி சில மனக்கசப்பால் பிரிந்தனர், கௌதம் ஏ .ஆர் .ரஹ்மான் உடன் கைக்கோர்த்தார். இருப்பினும் ரசிகர்கள் பழைய கூட்டனியைய்த்தான் எதிர் பார்த்தனர்.
தற்போது கௌதம் மேனன் இயக்கம் அஜித் படத்தில் இருவரும் இணைந்துள்ளனர்ளனர் , மேலும் இதை அதிகர்ப்பூர்வமாக கௌதம் மேனன் தன்னுடைய ட்விட்டர் வலைத்தளத்தில் ‘ஆறு பாடல்கள் ஹாரிஸ்  ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார் நாங்கள் இருவரும் இணைந்துவிட்டோம் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கிறான்’ என்று தெரிவித்துள்ளார் .
இதை தொர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ்  அவரது ட்விட்டர் வலைத்தளத்தில் ‘இது ஒரு மியூசிக் ஆக்சன் திர்ல்லர் படம்’என்றும் ‘மீண்டும் கௌதம் உடனும் முதன்முறையாக அஜித்துடன் இணைவது சந்தோசமாக இருப்பதாக’தெரிவித்துள்ளார்.  இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது . ‘தல ரசிகர்களுக்கு தினமும் ஒரு செய்தி சரவெடி தான்’

 

SHARE