சந்தானம் தான் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர். இவர் பல பேட்டிகளில் தல அஜித்துடன் நடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.
இவர்கள் கூட்டணியில் கடந்த வருடம் வெளிவந்த வீரம் படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, அப்படியிருக்க மீண்டும் சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் இதே கூட்டணி தான் நடிக்கும் என கூறப்பட்டது.
ஆனால், தற்போது வந்த தகவலின் படி இந்த படத்தில் சந்தானத்திற்கு பதிலாக சூரி கமிட் ஆனார் என்று கூறப்பட்டுள்ளது. சந்தானத்தின் ஹீரோ ஆசை தான் இதற்கு காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
இது மட்டுமின்றி சுந்தர்.சி இயக்கவிருக்கும் அரண்மணை-2 படத்திலும் சந்தானம் நடிக்கவில்லையாம்.