அஜித் வார்த்தை தவறினாரா பிரபல தயாரிப்பாளர் குழப்பத்தில்…

345

பிரபல தயாரிப்பாளர் ஏ .எம் ரத்னம் க்கு அஜித்தின் கால்ஷீட் தொடர்ந்து கிடைக்க ஏக சந்தோஷத்தில் இருந்தார். ஆனால் அவரை கலங்கடிக்கும் விதமாக ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

தற்போது இவரின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று பேச்சு இப்போதே தொடங்கியுள்ளது.

இதில் அஜித் தனது ஆஸ்தான இயக்குனர் விஷ்ணுவர்தனுடன் மீண்டும் இணைவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆரம்பம் படத்தின்போது விஷ்ணுவர்தனுக்கும் – ஏ.ஏம்.ரத்னத்துக்கும் ஒரு சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டதால் இனிமேல் இவரை வைத்து படம் பண்ணகூடாது என்ற முடிவில் இருக்கிறாராம் ரத்னம்.

இதனால் விஷ்ணுவர்தன் படத்தை வேறு தயாரிப்பாளரை வைத்து எடுப்பார் என்றும் இதனால் மீண்டும் ரத்னம் படத்தில் நடிப்பதாக கொடுத்த வாக்கை அஜித் மீறிவிடுவார் எனவும் ஒரு தகவல் கிசுக்கப்படுகிறது.

ஒருவேளை ரத்னம் விஷ்ணுவர்தன் ஆகிய இருவரையும் சமாதானம் செய்து வைப்பதற்காகத்தான் அஜித் இந்த முடிவை எடுத்துள்ளாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

SHARE