எந்த ஹீரோவாக இருந்தாலும் கேரக்டருக்கு ஏற்பத்தான் தோற்றம் இருக்கவேண்டும் என்று அடம்பிடிப்ப வர் பாலா. அவரிடம் அடம் பிடித்தார் ரஜினி மகள் ஐஸ்வர்யா. தனுஷ் நடித்த ‘3′ படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா இயக்கும் புதிய படம் ‘வை ராஜா வை’. கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடி. யுவன் சங்கர் ராஜா இசை. இப்படத்தின் ஆடியோ விழாவில் இயக்குனர் பாலா பேசியதாவது: இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். ஏன் சொல்கிறேன் என்றால் ஐஸ்வர்யாவுக்கு பிடிவாதம் அதிகம். அடம் பிடித்தே நினைத்ததை சாதிப்பார். இப்படத்தின் பூஜைக்கு என்னை கூப்பிட்டார். அப்போது நான் வெளியூரில் இருந்ததால் வர இயலாது என்றேன். ‘அண்ணா நீங்க வந்துதான் ஆகணும்’ என்றார். வந்துவிட்டேன். இதுபோல் இப்போதும் அவுட்டோர் படப்பிடிப்பில் இருந்தேன். 100 பேர் வேலை செய்கிறார்கள். அதைவிட்டு வரமுடியாது என்றேன். ஆனால் பிடிவாதமாக வந்தே ஆகவேண்டும் என்றார் வந்துவிட்டேன். ரஜினி சாரின் மகளாக இருந்தாலும் இன்னொரு தயாரிப்பாளரிடம் முறையாக கதை சொல்லி அதன்பிறகுதான் படம் இயக்கும் வாய்ப்பை வாங்கி இருக்கிறாய். அதனால் உனக்கு கண்டிப்பாக வெற்றிதான்.இவ்வாறு பாலா பேசினார்