அட்டாளைச்சேனையில் பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து நேற்று பொதுக் கூட்டம்

409

 

அட்டாளைச்சேனையில் பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அசாத் சாலி மற்றும் டட்லி உட்பட பொதுவேட்பாளரின் குழுவினர் பங்கு கொண்டிருந்தனர். இக்கூட்டத்திற்கு அதிகமான பொதுமக்கள் வருகை தந்து கூட்டத்தை அவதானித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய போறுப்பதிகாரி ஜெமீல் தனது கையடக்கத் தொலைபேசியால் கூட்டத்தையும் கூட்டத்திற்கு வந்தவர்களையும் படம் பிடித்தார்.

இச்செயல் கூட்டத்திற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு பொரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கோபமுற்ற பொதுமக்கள் இப் பொலிஸ் உயர் அதிகாரியின் இச்செயலுக்கு எதிராக கூச்சலிட்டனர்.

இதன் போது கூட்ட மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த பொது வேட்பாளரின் சகோதரர் கூட்டத்திற்கு வந்தவர்களை படம் பிடிப்பதற்கு பொலிசாருக்கு சட்டத்தில் இடமில்லை என்ற தொணியில் ஒலிபெருக்கியில் சத்தமிட கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் உடனே பொலிஸ் அதிகாரிக்கு எதிராக திரண்டதுடன் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.Polices

 

SHARE