அட்டாளைச்சேனை பலநோக்குகூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பான பல ஆவனங்கள் கையளிப்பு!

14

 

பைஷல் இஸ்மாயில் –

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் இணைந்து கிழக்கு மாகாண ஆளுநருக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கமைவாக, அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கூட்டுறவுத் திணைக்கள மாகாண ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கியிருந்தார்.

அதற்கமைவாக, மாகாண ஆணையாளரினால் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை நடாத்துவதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டு அவ்விடயம் தொடர்பில் முறைப்பாட்டாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

முறைப்பாட்டாளர்கள் தங்களது முறைப்பாடுகளை வழங்கியுள்ளதுடன் அதற்கு மேலதிகமாக இன்னும் பல ஆவணங்களை சமூக ஆர்வலர்களான அஸ்வர் ஷாலி, எம்.ரீ.ஹானிம், யூ.எல்.நிசார் உள்ளிட்ட பலர் கூட்டுறவு அபிவிருத்தி பிராந்திய அலுவலகத்திற்குச் சென்று பிரதம கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீடிடம் கையளித்து வைத்தனர்.

SHARE