அதிவேக நெடுஞ்சாலையில் காவற்துறை அதிகாரி மீது தாக்குதல்

436

அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றும் காவற்துறை அதிகாரி ஒருவர் மீது
அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன் அவரது வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

களுத்துறை – தொடங்கொட – போங்குவலயில் இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கெப் ரக வாகனம் ஒன்றில் வந்த நான்கு அடையாளம் தெரியாத நபர்களே இந்த
தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE