அந்த நடிகருடன் ஜெயம் ரவிக்கு பிரச்சனையா! ஏன் இப்படி தலைதெறிக்க ஓடுகிறார்

15

 

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இறைவன் மற்றும் சைரன் ஆகிய திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றியடையவில்லை.

அடுத்ததாக காதலிக்க நேரமில்லை, ஜீனி, பிரதர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி கமலின் தக் லைஃப் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகி இருந்தார் ஜெயம் ரவி. ஆனால், திடீரென கால்ஷீட் இல்லாத காரணத்தினால் தக் லைஃப் படத்திலிருந்து ஜெயம் ரவி விலகி விட்டார் என கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையே பிரச்சனையா
ஆனால், உண்மை அது இல்லை என கூறுகின்றனர். இப்படத்தில் துல்கர் சல்மான் முக்கிய ரோலில் நடிக்கவிருந்தார். ஆனால், அவர் இப்படத்திலிருந்து வெளியேறிய பின் துல்கர் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் சிம்புவை கமிட் செய்துள்ளனர்.

சிம்பு படத்திற்குள் வந்ததால் தான் ஜெயம் ரவி இப்படத்தில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டு வெளியேறினார் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிம்பு நடித்தால், நான் நடிக்க மாட்டேன் என ஜெயம் ரவி கூறியதாக தகவல் வெளிவந்தது. ஆனால், அதெல்லாம் உண்மை இல்லை என ஜெயம் ரவி கூறினார். அப்படி இருக்கையில் தற்போது மீண்டும் அதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் இதை பகிர்ந்துகொண்டார்.

SHARE