அனந்தி சசிதரனை விலைக்கு வாங்க இரு பிரதான கட்சிகளும் வலைவீச்சு

574

 

ananthi_eu23112013வடமாகாணசபையில் தனக்கென ஒரு தனி இடத்தினை பிடித்துக்கொண்டுள்ள அனந்தி சசிதரனை விலைக்கு வாங்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷவும், மைத்திரிபால சிறிசேனவும் பேரம் பேசி வருவதாக புலனாய்வாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும் விடயங்களை ஆராய்ந்தபொழுது 89000ற்கு மேலான வாக்குகளைப் பெற்ற அனந்தி அவர்கள் வடபகுதி மட்டுமல்ல கிழக்கு மாகாண மக்களிடத்திலும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டவர். துணிச்சல் மிக்க பெண் என்ற வகையிலும், முன்னாள் போராளியான எழிலனின் மனைவி என்ற வகையிலும், மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராக தற்பொழுது காணப்படுகின்றார். எனவே இவரை உள்வாங்குவதனூடாக தமிழ் மக்களின் வாக்குளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இவ்விரு கட்சிகளும் எதிர்பார்க்கின்றன. ஆனால் பல திரில்லியன் பணத்தினை வழங்கினாலும் அனந்தி சசிதரன் அவர்கள் அரசுடன் இணையமாட்டார் என்பது அவரது செயற்பாடுகளின் மூலம் சான்று பகர்கின்றது.

அனந்தி சசிதரன் வடமாகாண சபைக்கும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருந்துவருவதனால் அவரை இவ்விரு கட்சிகளும் உள்வாங்கும் செயற்பாடுகளை கட்டவீழ்த்துவிட்டிருக்கலாம். கிழக்குமாகாண தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கூறியதைப்போன்று, யார் வடமாகாணசபையிலிருந்தோ அல்லது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருந்தோ அரசு பக்கமாக இணைகின்றார்கள் என எதிர்பார்த்த வண்ணமே உள்ளனர். அனந்தி அவர்கள் இலங்கை மட்டுமல்ல சர்வதேசத்திலிருக்கக்கூடிய தமிழ் மக்களும் கூட அவர் முதலமைச்சரானால் என்ன என்பதை உள்ளங்களில் பேசாத அளவில் இல்லை என்ற அளவிற்கு அவரின் நாட்டுப்பற்று வெளிப்படையாகின்றது. ஆகவே இவரைப்போன்ற துணிச்சல்மிக்க பெண்மனியை விலைக்கு வாங்க இவ்விரு கட்சிகளும் நானா நீயா என போட்டிபோடுகின்றது. நிலைமைகள் எவ்வாறிருப்பினும் அனந்தி சசிதரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைகளிலும், பற்றிலும், இனவழிப்பு என்ற விடயத்திலும் இதுவரை தளராது நின்று தமிழினத்திற்காக குரல் கொடுத்துவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

ananthi  ananthi-keerimalai-180514-001 ananthi-sasasitharan-in-geneva ananthi-sasitharan-TNA hqdefault

 

SHARE