அனன்யாவின் திருமண சர்ச்சை படமாகிறதா? 

406
நாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும் என விரல்விட்டும் எண்ணும் அளவுக்கே தமிழ் படங்களில் நடித்திருக்கும் அனன்யா கடைசியாக புலிவால் என்ற படத்தில் நடித்தார். இதற்கிடையில் அனன்யாவுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதில் பிரச்னை ஏற்பட்டது. திடீரென்று குடும்பத்தினரே திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தனக்கு பார்த்த மாப்பிள்ளையை திருப்பதியில் ரகசிய திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அதிதி என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அனன்யா. இது திருமணம் ஆன ஒரு பெண்ணின் வாழ்க்கைபற்றி கதை என்பதால் அனன்யாவின் வாழ்க்கை கதைதான் இது என்று பரபரப்பு எழுந்தது. இதுபற்றி இயக்குனர் பரதன் கூறும்போது, அனன்யா வாழ்க்கை கதையா என்கிறார்கள்.
அவரது வாழ்க்கைக்கும் பட கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திருமணத்துக்கு பிறகு ஒரு சில பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இது திகில் கதை இல்லை ஆனால் அந்த உணர்வு படம் முழுவதும் இருக்கும். நந்தா, நிகேஷ்ராம் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர் என்றார்

 

SHARE