அனிஞ்சியன் குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது கருத்து தெரிவித்த வைத்திய கலாநிதி சி.சிவமோகன்

129

 

அனிஞ்சியன் குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது கருத்து தெரிவித்த வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பிரித்தானிய ஏகாதிபத்தியம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இலங்கை சுதந்திரமடைந்தபோது தமிழினம் தலைநிமிர்ந்து நின்றது.
unnamed (6) unnamed (7) unnamed (8) unnamed (9)
அன்றைய அடிமை சாசனமாகிய இலங்கை அரசியல் யாப்பை அன்றிருந்த எமது தலைமைகள் புரிந்து கொள்ள தவறிவிட்டன. அதன் விளைவுகளை பல தமிழினப் படுகொலைகளாக நாம் பார்த்திருக்கிறோம்
.
1983 ம் ஆண்டு இனக்கலவரத்தில் எமது மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களது பொருளாதார வளம் அன்று பாதுகாப்பு படையினரின் கண்களின் முன்னே சூறையாடப்பட்டது. எந்தவொரு பாதுகாப்பையும் அன்று இலங்கையின் அரசியல் அடிமை சாசனம் எமக்கு தந்துவிடவில்லை.
எனவே தமிழினத்திற்கு சுதந்திர வாழ்வு வேண்டுமெனின் தமிழினம் தன்னை ஆழவேண்டும் இலங்கை அரசியல் சட்டத்தை இன்று பாதுகாப்பு படையினர் தமது வசதிகளுக்கு ஏற்றவாறு வளைத்து எமது தமிழ் மக்களின் மீது ஏவி விடுகிறார்கள். எனவே எம் மக்களை நேசிக்காது அன்னியபடைகள் என்றும் எமக்கு பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை என தெரிவித்தார்.
SHARE