அனிமல் படத்தின் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

47

 

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் அனிமல்.

Pan இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். மேலும் பாபி தியோல், அணில் கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து வருகிற டிசம்பர் 1 வெளிவரும் இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடையும் என ரசிகர்களால் கூறப்படுகிறது.

முதல் விமர்சனம்
இந்நிலையில், இப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. இதில் ‘சினிமா ரசிகர்களை இப்படம் கண்டிப்பாக அதிர்ச்சியில் உறையவைக்கும். தேசிய விருதை வெல்லும் அளவிற்கு இப்படத்தில் ரன்பீர் கபூரின் நடிப்பு உள்ளது. இப்படம் கண்டிப்பாக அவருடைய சினிமா கெரியரில் திருப்பு முனையாக அமையும்”.

“இளைஞர்களை இப்படம் கண்டிப்பாக கவரும். ஆக்ஷன் காட்சிகள் மிரட்டுகிறது. நடிகர்களின் நடிப்பு, படத்தின் ஸ்கிரிப்ட், இசை போன்ற அனைத்து விஷயங்களும் படத்தை பார்க்க தூண்டும்” என உமைர் சந்து தனது விமர்சனத்தை கூறியுள்ளார். இவர் வெளிநாட்டு சென்சார் போர்டு உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE