அப்பாவி மக்கள் மீது ரஷ்ய துருப்புக்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு ; இருவர் பலி!

11

 

உக்ரைன் தலைநகர் கீவில் அப்பாவி பொதுமக்கள் மீது ரஷ்ய படைகள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மீது தாக்குதலை அதிதீவிரப்படுத்தியுள்ள ரஷ்யப் படைகள் தொடர்ந்து பொது மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதலை நடத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் மாதம் கீவில் அப்பாவி பொதுமக்கள் மீது ரஷ்ய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் கார் டீலர்ஷிப் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த 2 பேர் உயிரிழந்ததுள்ளதாக உகரைன் தகவல்கள் கூறுகின்றன

SHARE