அமச்சர் மேர்வின்சில்வா இந்துமக்களை அவமதித்துள்ளார் -நல்லுர் சம்பவம்

405

 

தனிப்பட்ட பயணமாக யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டு இன்று நல்லூர்க் கந்தனை தரிசிக்கச் சென்றார் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா. அவருக்கு அங்கு பெரு வரவேற்பு வழங்கப்பட்டதுடன் அமைச்சரின் வாகனம் ஆலயத்தின் உட்பகுதிவரை செல்ல அனுமதிக்கப்பட்டது. அமைச்சரும் அவரது மெய்ப் பாதுகாவலர்களும் ஆலய வாயில் வரை பாதணிகளுடன் சென்று அவற்றைக் கழற்றாது வழிபாட்டில் ஈடுபட்டனர். ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் கலாசார உடை அணிந்து வரவேண்டும் என்பதுடன் இந்து ஒழுக்கநெறிகளையும் கடைப்பிடிக்கவேண்டும் என்று யாழ். மாநகர சபை அறிவித்திருந்தது. அமைச்சர் மேர்வின் இவ்வாறு நடந்துகொண்டமை இந்துக்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியது. மிருப பலியை நிறுத்துவதற்காக குரல்கொடுத்துவரும் அமைச்சர் ஆலய புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் இன்று வழிபாடியற்றிச் சென்றுள்ளார் என்று பலரும் குற்றம் சுமத்துகின்றனர். ஆலய நடைமுறைகளை அமைச்சருக்கு எடுத்துக்கூறி அவரை வழிப்படுத்துவதற்கு அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. –

mervin 6541d

SHARE