ஓமந்தை சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேசகுருக்களின் ஆசியுரையுடன் சைவசித்தாந்த வித்தகர், பண்டிதர் அமரர் சிவலிங்கம் அவர்களின் கந்தபுராண சுருக்கம் எனும் நூலின் அறிமுக விழா இளைப்பாறிய அதிபர் பொ.சிவஞானம் தலைமையில் 05.10.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று ஓமந்தை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், சைவ அன்பர்கள் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்தனர். பிரதம விருந்தினர்களாக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா கல்வியல் கல்லூரி முதல்வர் சிதம்பரநாதன், வடமாகாணசபை உறுப்பினர் தியாகராசா, வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர் சிவலிங்கம், ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் திருஞானசம்பந்தமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.