கடந்த 25வருட காலங்களாக விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு ஆயுதங்களை வழங்கிவந்த குமரன் பத்மநாதன் என அழைக்கப்படும் கே.பி, தற்பொழுது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார் என்பது ஒரு வேடிக்கைக்குரிய விடயமே.
இவருடைய ஆயுத பரிமாற்றங்கள் (வியாபாரம்) 175 நாடுகளில் இடம்பெற்றுவந்தது. உலக வரலாற்றில் பல கோடிகளுக்கு சொந்தக்காரரும், பல தொழில் நிறுவனங்களுக்கு உரிமையாளருமாகிய கே.பியை கைதுசெய்து சிறையில் அடைப்பதாலும், பிரபாகரனின் இறப்பு தொடர்பிலும், முன்னைய அரசாங்கங்களுக்கு விடுதலைப்புலிகளின் சொத்துக்களை வழங்கியமை தொடர்பிலும் அவரை விசாரணை மேற்கொள்வதில் இந்த அரசிற்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்பெறாது. குமரன் பத்மநாதனை மீது இந்த அரசாங்கம் சிறைத் தண்டனைக்குட்படுத்துமாகவிருந்தால் அரசு ஐரோப்பிய நாடுகளின் நெருக்குதல்களுக்குள்ளாகவேண்டியேற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.