அமெரிக்காவில் ஆன்லைனில் போதைப்பொருள் விற்றவருக்கு ஆயுள் தண்டனை

320

அமெரிக்காவை சேர்ந்தவர் ரோஸ் அல்பிரிட் (31). இவர் சில்க்ரோடு என்ற பெயரில் இணையதளம் நடத்தி வந்தார். அதன் மூலம் ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்தார்.

அதில் சட்ட விரோதமாக ரூ.1300 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை சர்வதேச அளவில் விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. மேலும் பண மோசடி உள்ளிட்ட பல குற்றச்செயல்களிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

எனவே கடந்த 2013–ம் ஆண்டு அக்டோபரில் அவரது இணையதளத்தை அமெரிக்காவின் எப்.பி.ஐ உளவு நிறுவனம் மூடியது. மேலும் கைது செய்யப்பட்ட ரோஸ் அல்பிரிட் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கோர்ட்டில் அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி அவருக்கு 20 ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக் கப்பட்டது.

SHARE