அமெரிக்காவில் இறந்தவர் முகம் வேறு ஒருவருக்கு பொருத்தி சாதனை

379

அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியாவை சேர்ந்தவர் ரிச்சர்டு நோரிஸ். இவர் 22 வயதாக இருந்த போது அதாவது கடந்த 1997–ம் ஆண்டு தனது தலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அதில் அவர் சாகவில்லை. மாறாக அவரது அழகிய முகம் சிதைந்து சின்னா பின்னாமாகியது. குணமடைந்த பிறகு, அவரது முகத்தை சீரமைக்க டாக்டர்கள் பல தடவை ஆபரேசன் செய்தனர். இருந்தும் அவரது முகத்தை சரி செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜோஸ்வா என்ற 21 வயது வாலிபர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். எனவே அவரது முகத்தை தானம் பெற்று ரிச்சர்டு நோரிசுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினர்.

இந்த ஆபரேசனை மேரி லேண்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மைய டாக்டர்கள் மேற்கொண்டனர். இந்த ஆபரேசன் 3 மணி நேரம் நடந்தது.

அப்போது அவரது பல், தாடை, நாக்கு மற்றும் நரம்புகள் மாற்றப்பட்டன. இதனால் அவர் முற்றிலும் குணமடைந்தார். அதை தொடர்ந்து ரிச்சர்டு நோரின் முகம் இறந்த ஜோஸ்வாவின் முகத்தோற்றமாக மாறியது.

இந்த நிலையில் சமீபத்தில் விர்ஜினியா வந்த ஜோஸ்வாவின் சகோதரி ரேபேகா அவெர்சனோ முகம் மாற்று ஆபரேசன் செய்து கொண்ட ரிச்சர்டு நோரிசை நேரில் சந்தித்தார். அப்போது, அவரது முகம், அச்சு அசல் இறந்த தனது சகோதரன் ஜோஸ்வா போன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி கலந்த ஆனந்தம் அடைந்தார்.

மிகவும் உணர்ச்சி வசப்பட்ட அவர், நோரிசிடம், ஆட்சேபனை இல்லையென்றால் உங்களின் முகத்தை ஒரு தடவை தொட்டு பார்க்கலாமா என பரிவுடன் கேட்டார். அதற்கு அவர் சம்மதிக்கவே அவரது முகத்தை தொட்டு பார்த்து மகிழ்ந்தார். அவரை தனது சகோதரனை நேரில் பார்ப்பது போன்று இருப்பதாக பரவசம் அடைந்தார்.

அவரை தொடர்ந்து ஜோஸ்வாவின் தாயார் ஜிவெனும் நோரிசை நேரில் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டார். எனது மகன் இறந்த போது அவனது முகத்தை தானமாக வழங்கியது நாங்கள் எடுத்த நல்ல முடிவு. எனது மகனின் உருவத்தை நோரிஸ் மூலம் பார்க்கிறேன். அவனிடம் இருந்த அதே உருவ ஒற்றுமை இவரிடம் இருக்கிறது என்றார்

SHARE