அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூடு: ஒருவர் பலி – 5 பேர் படுகாயம்

341
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் புறநகர் பகுதியில் புதன்கிழமை காலை வெள்ளை நிற மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.அங்குள்ள உணவகம் மற்றும் ஓட்டலில் ஆகிய 3 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் மொத்தம் 6 பேர் துப்பாக்கி சுடப்பட்டதாக, மெசா நகரை சேர்ந்த காவல் அதிகாரியான எஸ்டேபன் புளோரஸ் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக, கழுத்தில் மிகப்பெரிய டாட்டூ வரைந்திருந்த 40 வயது வெள்ளை நிற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

தனியாக தான் அந்நபர் துப்பாக்கியால் 6 பேரையும் சுட்டதாக தெரிவித்த காவல்துறையினர், இச்சம்பவத்தையடுத்து அங்குள்ள கிழக்கு பள்ளத்தாக்கு தொழில்நுட்ப கல்லூரியை சுற்றியுள்ள சாலையை மூடிவிட்டனர். இன்று அக்கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE