அமெரிக்காவில் மோடி செய்த ஒப்பந்தத்தின் திடுக்கிடும் தகவல்கள் .

415

 

இந்தியப் பிரதமர் நரேந் திர மோடி அமெரிக்கா சென்றபோது அங்குள்ள முதலாளிகளிடம் அவர் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் தொழிலாளர் நலன்களுக்குக் கேடானது என்ற உண்மை வெளி யாகியுள்ளது.

இதுகுறித்து மோடி அமெரிக்கா சென்ற போது அங்கிருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் அளித் திருக்கும் வாக்குறுதிகள் குறித்து பல்வேறு தகவல் களை ட்ரூத் ஆப் குஜராத் இணையம் வெளியிட்டிருக் கிறது. அதில் கூறியிருப்ப தாவது:- கடந்த 2001-ஆம் ஆண்டு குஜராத்தில் நரேந்திர மோடி முதல மைச்சரானதில் இருந்து பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக நடந்து வரு கிறார். அங்கு புதிய பொருளாதார மண்டலம் என்ற பெயரில் அரசு நிலங்களை தனது நெருங் கிய நண்பர்களும் பெரும் முதலாளிகளுமான அம் பானி, அடானி, டாட்டா ஆகியோருக்கு வாரி வழங்கினார். இப்படி 55 புதிய பொருளாதார மண் டலங்கள் அமைக்கப் பட்டன.

இவற்றின் மூலம் 27,125 ஹெக்டேர் நிலங்கள் பெரிய முதலாளிகளுக்கு தாரைவார்க்கப்பட்டன. இதில் பெரும்பகுதியான நிலங்கள் சாதாரண ஏழை விவசாயிகளிடம் இருந்து கட்டாயப்படுத்தி பிடுங்கப்பட்ட நிலங்கள் ஆகும். இந்த நிலங்களை இழந்த ஏழை விவசாயிகள் வாழ்வாதாரத்தை தேடி பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்தநிலங்களை மோடி அரசு கையகப்படுத்திய போது பல்வேறு மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டது.மத்தியில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு அமைந்ததில் இருந்து பெரும் முதலாளிகளுக்கு மேலும் சலுகைகள் அள்ளி தரப்பட்டன.

சட்டங்கள் மாற்றம்

இதற்காக சட்டங்களும் மாற்றப்பட்டன. புதிய பொருளாதார மண்டலத் தில் தொழில் நிறுவனங் கள் தொடங்குபவர்கள் அங்குள்ள பஞ்சாயத்து களுக்கு வரி கட்ட வேண்டியதில்லை என்ற சட்டம் கொண்டு வரப் பட்டது. இது சாதாரண மனிதனுக்கு பெரும் வரிச்சுமையாகவும், பணக் கார பெரும் முதலாளி களுக்கு வரி சலுகை யாகவும் அமைந்து விட்டது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி செப்டம்பர் 28-ஆம் தேதி மடிசன் சதுக்கத்தில் முதலாளிகள் பேசும்போது, வெளிநாட்டு முதலாளிகள் இந்தியாவில் தொழில் தொடங்க தடை யாக உள்ள அனைத்துச் சட்டங்களையும் ஒழிக்க தயார் என்றும், இதற்காக காலாவதியான சட்டங்கள் ஒழிக்கப்படும் என்று தெரிவித்தார்.

29ஆ-ம் தேதி காலை மோடி, அமெரிக்காவில் பிரபலமாக விளங்கும் கூகுள், பெப்சிகோ, கேட் டர்பில்லர் உள்ளிட்ட 11 தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், இந்தியா பொருளா தார மாற்றத்தை விரும்புகிறது. வெளிநாட்டு முதலீட்டுக்காக இந்தியா அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. இதற்காக தொழிலாளர் கள் சட்டங்கள் தடையாக இருக்காது என்று தெரி வித்தார். அதே நாள் மோடி மிகப்பெரிய தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். அந்த கூட்டத்தில் மத்திய சட் டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசும் போது, 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டம், 1961-ஆம் ஆண்டு அப்ரண் டிஸ் சட்டம், 1988-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டம் ஆகிய 3 முக்கிய சட்டங்கள் மாற்றி அமைக் கப்படும்.

மேலும் மொத்தம் 287 சட்டங்களை மாற்ற வேண்டியிருக்கிறது என்று தெரிவித்தார். ராஜஸ் தானில் உள்ள பாரதிய ஜனதா அரசு ஏற்கெனவே 1947ஆ-ம் ஆண்டு தொழில் தகராறு சட்டம், 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டம், 1970-ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் ஆகியவற்றை திருத்தி விட்டது குறிப் பிடத்தக்கது .வர்த்தகத்தை பெருக்க மோடி அரசு தொழிலாளர் சட்டம் மற்றும் சுற்றுச்சுழல் சட் டங்களை மாற்றுவதில் அதிக தீவிரமாக உள்ளது. ஆனால் இதற்கு தொழி லாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தி யில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

 

SHARE