அமெரிக்காவில் 75 ஆண்டுகாலமாக ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்த தம்பதியினர் ஒன்றாக கைகோர்த்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

177

 

[
அமெரிக்காவில் 75 ஆண்டுகாலமாக ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்த தம்பதியினர் ஒன்றாக கைகோர்த்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த அலெக்சாண்டர்(95), ஜேனெட்(96) தம்பதியினர் 1940 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இல்லற வாழ்க்கையை நல்லறமாய் நடத்திவந்த இவர்களது வாழ்க்கைக்கு அடையாளமாக 5 குழந்தைகள், 10 பேரக்குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஜேனெட் உடல்நலக்குறைவால் படுத்து படுக்கையிலேயே தொடர்ந்து இருந்து வந்துள்ளார்.

கணவனின் அருகில் இருந்து அவரை கவனித்துக்கொண்ட ஜேனெட், தனது கணவருடன் இணைந்தே மரணத்தை தழுவ வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

மேலும், நாங்கள் இருவரும் கைகளை கோர்த்த வண்ணம் உயிரிழக்க வேண்டும் என்ற தங்களது ஆசையை குழந்தைகளிடம் தெரிவித்து வந்துள்ளனர்.

இவர்கள், ஆசைப்பட்டபடியே இறப்பிலும் கைகோர்த்தபடியே உயிரிழந்துள்ளனர், தங்களது தாத்தா பாட்டி இறந்துவிட்டதை நினைத்து பேரக்குழந்தைகள் கவலையில் உள்ளனர்.

SHARE