அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சவால்….

392
 

ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு பயந்து பதுங்கியுள்ள யாஸிதி இன மக்கள் வெளியேற்றப்படுவர் என அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

ஈராக்கின் சின்ஜார் பகுதியில் வாழும் யாஸிடி மக்கள் மீதான தாக்குதலை, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் அதிகரித்ததால், அங்குள்ள மலைகளில் அந்த மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அவர்களுக்கு அமெரிக்க ஹெலிகொப்டர்கள், உணவு மற்றும் தண்ணீர் பொட்டலங்களை வீசி வருகின்றன.

மேலும் அந்த பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள பயங்கரவாதிகள் மீது, அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து யாஸிதி இன மக்களை காப்பாற்றப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா செய்யவுள்ளது என்றும் மக்களை அப்புறப்படுத்துவதற்கான யோசனையில் தான் தற்போது நாங்கள் ஆழ்ந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே யாஸிதி மக்களுக்கு உதவி செய்வதற்காக ஈராக்கிற்கு, கூடுதலாக 130 வீரர்களை அமெரிக்கா நேற்று அனுப்பி வைத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

SHARE