அமெரிக்கா சென்ற பசில் நாடு திரும்பவுள்ளார்?-அரசியல் வட்டாரங்கள்

348

 

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பசில் ராஜபக்ச இலங்கை திரும்பவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன் அவர் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் எந்த கட்சியில் போட்டியிடுவது என்பது குறித்து அவர் இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படாது போனால், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிட போவதாகவும் முன்னர் தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போது மேற்கொண்ட விடயங்களை எவரும் மறக்கவில்லை எனவும் பசில் ராஜபக்ஷ, அமெரிக்காவில் உள்ள தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார்.

SHARE