அமெரிக்க கடற்படையினரின் தொடர்மாடியில் இலங்கை பெண் உயிரிழப்பு .

147

பஹ்ரைனில், அமெரிக்க கடற்படையினரின் தொடர் மாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியிலிருந்து கீழே விழுந்து இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை, விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தவேளை 23 வயதான குறித்த பெண் மாடியில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

இவர் கீழே விழுந்த சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்கு அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் முயற்சித்தபோதிலும் அது பலனளிக்கவில்லை.

பஹ்ரைனில் புனித ரமழான் மாதம் என்பதால் மதுபானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அமெரிக்க பணியாளர்களுக்கு அவர்களது வீட்டில் மது அருந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்க கடற்படையினர் பஹ்ரைன் அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லையென பஹ்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க கடற்படை வீட்டுத்தொகுதியில் இடம்பெற்ற இரண்டாவது உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளதோடு, கடந்த மே மாதம் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த ஒருவர் மாலுமி ஒருவர் ஹோட்டல் ஒன்றில் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE