அமைச்சரவையில் எதிர்வரும் பொதுத் தேர்தல் தற்போதைய முறையில் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

128

எதிர்வரும் பொதுத் தேர்தல் தற்போதைய முறையில் நடத்தப்படும் என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் முறைமை தொடர்பான 20 வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றி அதன் பின்னர், பழைய முறையின் கீழ் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இது குறித்த யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நிறுவப்படும் நாடாளுமன்றின் பதவிக் காலம் பூர்த்தியானதன் பின்னர் நடைபெறும் பொதுத் தேர்தல், புதிய முறையில் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

20ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் மற்றும் புதிய தேர்தல் முறைமை குறித்தும் அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது நடைமுறையில் உள்ள விருப்புத் தெரிவு முறையில் தேர்தல் நடத்தப்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

SHARE