அமைச்சர் ரிசாத்துக்கு சொந்தமாக 3000 ஏக்கர் காணி: பல மில்லியன் சொத்துக்களும் உள்ளன: சட்டத்தரணி அம்பலம்..!!

149

 

அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சொந்தமாக மன்னார் மாவட்டத்தில் 3000 ஏக்கர் காணி உள்ளது. காணியனைத்தும் அவருடைய மனைவி, தந்தை, சகோதரர்கள் என உறவினர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Rishad-Bathiudeen-With-Mahida Rishad-Ranil

இவைதொடர்பான அனைத்து ஆதாரங்கள் அடங்கிய கோப்புகள் எங்களிடம் உள்ளது என தெரிவித்த வட மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா, குறுகிய காலப்பகுதியில் ரிசாத்துக்கு எவ்வாறு பல மில்லியன் ரூபா சொத்துக்கள் கிடைக்கப்பெற்றது எனவும் கேள்வியெழுப்பினார்.

யுத்தத்தினால் அனைத்தையும் இழந்து நிர்கதியான மக்களைக் காட்டி அமைச்சர் றிஷாத் பதியுதீன் பணம் சம்பாதித்து வருவதாகவும் அதனாலேயே வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இன்னும் அகதிகளாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது சேவை பெறுனரான, றிஷாத் பதியுதீனுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவில் சொத்துக் குவிப்பு தொடர்பில் முறைபாடளித்த குவாதிர் கான் சார்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது தன்னிடம் 4 கோடி ரூபா கப்பம் கோரியதாக றிஷாத் நாடகம் ஆடுவதாகவும் அரசியல் இலாபம் கருதி வில்பத்து விவகாரத்திலும் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்துவதாகவும் இதன் போது அவர் குற்றம் சுமத்தினார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
2000 ஆம் ஆண்டு ரிஷத் என்ப்வர் அரசிஒயலுக்கு வரும் போது அவருக்கு சொந்தமாக ஒரு மோட்டார் சைக்கிளோ அல்லது காணித் துண்டோ இருக்கவில்லை. ஆனல் இன்று அவருக்கு சொந்தமாக மன்னார் தீவில் மட்டும் 3000 ஏக்கர் காணி உள்ளது.

இது அவரது நெருங்கிய உரவினர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தனையும் 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் சம்பாதிக்கப்பட்டவை.

இதனை விட அண்மையில் தனியார் நிறுவனம் ஒன்ருக்கு ரிஷாத்துக்கு சொந்தமான 60 மில்லியன், 49 மில்லியன் ரூபா பெறுமதியிலான இரு ஆதனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவையெல்லாம் றிஷாத்தின் சொத்துக்களில் ஒரு பகுதியே.

உன்மையில் எமக்கு உள்ள சிக்கல் என்னவெனில் இத்தனை சிக்கல்களையும் அவர் எப்படி இந்த குருகிய காலத்தில் சம்பாதித்தார் என்பதாகும். அது தொடர்பில் எனது கட்சிக் காரரால் கடந்த மார்ச் மாதம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.

SHARE