அமைச்சர் ரிஸாத் பதியூதீன் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தகவல்கள்

403

 

அமைச்சர் ரிஸாத் பதியூதீன் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தீர்மானித்ததாக கூறப்படுகிறது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியில் அமைச்சர் ரிஸாத் பதியூதீன் மீது காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை இரவு நாமல் ராஜபக்ஸவுடன் அமைச்சர் ரிஸாத் பதியூதீன் தர்க்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வவுனியாவில் நாமல் ராஜபக்ஸவுடன் இணைந்து நடத்தவிருந்த நிகழ்ச்சி ஒன்றை அமைச்சர் ரிஸாத் பதியூதீன் இரத்து செய்துவிட்டார் என்றும் அரசாங்கத்திலிருந்து வெளியேறும் முடிவை இன்னும் சில தினங்களில் அறிவிப்பார் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவல்கள் தெரிவிக்கின்றன.

பொது எதிரணிக்கு ஆதரவு அதிகரித்துவரும் நிலையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்காக அமைச்சர் ரிஸாத் பதியூதீன் நாமல் ராஜபக்ஸவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை பெரிதுபடுத்தியதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

இதேவேளை மன்னாரில் இடம்பெற்ற முன்னாள் போராளி ஒருவரின் படுகொலையில் அமைச்சர் ரிஸாத் பதியூதீனுக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்க முன்வந்ததாகவும் வவுனியா தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை கிழக்கு மாகாண சபை உறுப்பினாக இருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமீர் அலிக்கு அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE