அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இனியபாரதி என்றளைக்கப்படும் புஸ்பகுமார் வீட்டை மைதிரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் 3 ஆயித்துக்கு மேற்பட்டோர் ஒன்றினைந்து சுற்றிவளைத்து அவரை வெளியேறுமாறு ஆர்ப்பாட்டம் செய்ததுடன் வீட்டுக்குள் உள்நுளைந்து அவரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையடுத்து அவர் அங்கிருந்து பொலிசாரின் பாதுகாப்புடன் தப்பி ஓடியுள்ள சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவிவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் மைதிபால சிறிசேன வெற்றி பெற்றதையடுத்து திருக் கோவில் பிரதேசத்திலுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஒன்றினைந்து தம்பிலுவில் மத்திய சந்தை வீதியிலுள்ள இனியபாரதியின் வீட்டை சுற்றிவளைத்து வீட்டுக்குள் உள்நுளைந்து அவர் மீது தாக்குதலை மேற் கொண்டனர்.
இதனையடுத்து அவர் அவரின் மெய்பாதுகாப்பாளர்களான பொலிசார் அவரின் ஆதரவாளர்களுடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் இதனையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் விலகிச் சென்றுள்ளனர்.
அதேவேனை த.ஆத. கூட்டமைப்பில் இருந்து ஆளும் கட்சிக்கு மாறிய நாடாள மன்ற உறுப்பினரான பி.எச்.பியசேன வின் வீட்டின் மீது பட்டாசுகளை வீசி பொதுக்கள் வெடிக்கவைத்ததுடன் சுதந்திரக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் ரகுபதியின் வீட்டை முற்றுகையிட்டபோது அவர்வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார் இவ்வாறே த.தே.கூ. இருந்து கட்சி தாவிய ஆலையடிவேம்பு பிரததேசசபை உறுப்பினர் தியாகராசா மற்றும் கட்சி தாவிய வடிவேல் ஆகிய இருவரும’; அவர்களது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளனர் இவர்களது வீடுகளுக்கு சென்ற மைத்திரியின் ஆதரவாளர்கள் வீடு பூட்டியிருப்பதை அடுத்து திரும்பிச் சென்றுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது .