அம்மன் படத்தில் நடித்த சிறுமி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?

54

 

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான சாமி படங்கள் உள்ளது, அதில் ஒன்று தான் அம்மன். ஒரு காலகட்டத்தில் கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் சாமி படங்களும் ஹிட் கொடுத்து வந்தது.

சாமி படங்களில் வரும் பாடல்களை கேட்டு திரையரங்குகளில் சாமி ஆடியவர்களும் உள்ளார்கள். இந்த படத்தின் மூலம் நடிகை ரம்யா கிருஷ்ணனை நிஜ அம்மனாக கொண்டாடிய மக்கள் உள்ளார்கள்.

1995ம் ஆண்டு வெளியான அம்மொரு படத்தின் தமிழ் ரீமேக் தான் அம்மன் திரைப்படம். ரூ. 2 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தில் வந்த கிராபிக்ஸுக்கு மட்டும் ரூ. 80 லட்சம் செலவானதாம்.

சிறுமி யார்
இந்த அம்மன் படத்தில் குழந்தை அம்மனாக நடித்தவர் பெயர் சுனைனா பாதம்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் அம்மன் படத்திற்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக 25 படங்களில் நடித்திருக்கிறார். 1996ம் ஆண்டு ஒரு படத்தில் நடித்துள்ளார் அதன்பிறகு சினிமா பக்கம் அவரை காணவில்லை.

பின் திருமணம், குழந்தைக்கு பிறகு ப்ராஸ்டேட்ட வுமன் என்ற வெப் சீரிஸில் நடித்தார், அதைத்தொடர்ந்து படங்கள் மற்றும் வெப் சீரீஸில் நடித்து வருகிறார்.

சமந்தாவின் ஓ பேபி, அஜித்தின் வலிமை போன்ற படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

SHARE