அரசாங்கத்தில் இன்று பதவியேற்கவுள்ள நால்வர்

33

 

இன்று நான்கு அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஜி.எல்.பீரிஸ், பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோரே பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அமைச்சுப் பதவிகளே வழங்கப்படலாம் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் முன்னதாக ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகாரம், காஞ்சன விஜேசேகர மின்சக்தி எரிசக்தி அமைச்சு, தினேஷ் குணவர்தன கல்வி, பிரசன்ன ரணதுங்க பொது பாதுகாப்பு அமைச்சு என்பவற்றினை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE