அரசாங்கத்துடன் இருந்து குழிபறிக்கவே ரவூப் ஹக்கீம் முற்படுகிறார் பொதுபலசேனவுடன் தொடர்பு வைப்பது
ஆபத்தானது என்பது -நன்கு தெரியும்
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு! மீண்டும் ஒன்றுகூடும் முஸ்லிம் காங்கிரஸ்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கட்சியின் உயர் மட்டக்குழு இன்று சந்திப்பொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதற்கு முன்னரும் குறித்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே பல சந்திப்புக்கள் இடம்பெற்ற போதும் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.