இலங்கை துறைமுக அதிகாரசபையின் கொம்பனித்தெரு நிலையம், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார காரியாலயமாக பயன்படுத்தப்படவிருந்தது என்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தநிலையத்துக்கு நேற்று கண்காணிப்புக்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சியினர் சென்ற போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
குறித்த நிலையம் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நிலையமாக பயன்படுத்தப்படவிருந்ததாக கிடைத்த தகவலை அடுத்தே ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு கண்காணிப்புக்காக சென்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்துள்ளார்.
இதன்போது சுமார் 50 அடி நீளமான பிரசார மேடை ஒன்றும் பாரிய தொலைக்காட்சி திரை ஒன்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிறிய கட்அவுட்டுகளும் காணப்பட்டன.
இந்த பிரசார சாதனங்கள் யாவும் சுமார் 100 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியானவை என்று யோகராஜன் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் அரசாங்கம் அரச நிதியை தமது பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.