கதிர்காமம் வெடிஹிட்டி கந்த விஹாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவப் படையினரைக் கொண்டு காண்கள் வெட்டப்படுவதாகவும், சாப்பாட்டுத் தட்டுகள் கழுவப்படுவதாகவும் சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும், படையினரை இழிவுபடுத்தும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
இன்று அனுராதபுரம், பொலனறுவை மற்றும் திருகோணமலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படையினரே உதவிகளை வழங்கி வருகின்றனர்.
குறித்த மக்களின் உயிர்களை படையினர் மீட்கின்றனர்.
பொலனறுவையில் 14 பாடசாலைகளை படையினர் நிர்மாணித்துள்ளனர், இதனால் அரசாங்கத்திற்கு பாரியளவு செலவு குறைக்கப்பட்டுள்ளது.
போரின் பின்னர் 10,000 படையினர் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களில் மேசன்கள், இலக்ட்ரிசியன்ஸ், தச்சர்கள் உள்ளிட்ட பலரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
போரின் பின்னர் 25000 இராணுவப்படையினர் இணைத்துக் கொள்;ளப்பட்டனர்.
பல்வேறு வெளிநாட்டு சக்திகள் தொடர்ந்தும் நாட்டுக்கு எதிராக சதித் திட்டம் முன்னெடுத்து வருகின்றன.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டாலும் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய படையினரின் ஒத்துழைப்பு அவசியமானது.
மீட்கப்பட்ட வடக்கு கிழக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்தும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய அனர்த்தங்களின் போதும் படையினர் முக்கிய பங்களிப்பினை வழங்கி வருகின்றனர் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.