அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – மஹிந்த ராஜபக்ச

320
அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

கடுவெல, கொரதொட்ட பத்தினி தேவாலயத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்கையில்,

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாடு எதிர்நோக்கியுள்ளது.

40 ஆண்டு கால அரசியல் அனுபவம் உடையவன் என்ற ரீதியில் தேசிய பாதுகாப்பு விடயத்தில் பேரம்பேசக் கூடாது என்ற அறிவுரையை புதிய அரசாங்கத்திற்கு வழங்குகின்றேன்.

நாட்டை ஐக்கியப்படுத்தி சுதந்திரத்தை ஏற்படுத்தியே ஜனவரி மாதம் 9ம் திகதி நான் புதிய அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைத்தேன்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்த என்னை சோதிக்காது, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை புதிய அரசாங்கம் கவனிக்க வேண்டும்.

எனினும், எனது பொருட்கள் இருப்பதாகத் தெரிவித்து அங்கும் இங்கும் தேடுதல் செய்வதில் அரசாங்கம் கூடுதல் நேரத்தை செலவிடுகின்றது.

என்னுடன் எவரேனும் பேசினால் நீதிமன்றில் உத்தரவு பெற்றுக்கொண்டு சென்று அவர்களது வீடுகள் சோதனையிடப்படுகின்றன.

வீடுகளை சோதனையிட உரிமை உண்டு என்ற போதிலும் இவ்வாறான இழிவான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது.

பௌத்த விஹாரைக்கு சென்றாலும் சில தலைவியர் என்னை கேலி செய்கின்றார்கள். என்னுடன் வரும் மக்கள் சோற்றுப் பொதிகளுக்காக வருவதாக கிண்டல் செய்கின்றார்.

என்னை அவமானப் படுத்தினால் பரவாயில்லை. எனினும், என்னுடன் வரும் மக்களை அவமானப்படுத்த வேண்டாம் என மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

SHARE