அரசாங்க அதிகாரிகள் அமெரிக்க வீசாக்களை புதுப்பித்து கொள்வதாகஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றச்சாட்டு:

409

 

அரசாங்க அதிகாரிகள் அமைச்சர்கள் அமெரிக்க வீசாக்களை புதுப்பித்துக் கொள்வதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஐக்கிய இலங்கை என்ற கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கவனத்திற்கொள்வதில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும, பாராளுன்ற உறுப்பினர் சந்திம ராசபுத்திர மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஆகியோர் தங்களது அமெரிக்க வீசாக்களை புதுப்பித்துக்கொண்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் அமெரிக்கப் பிரஜைகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கைக்கு வந்த இவர்கள் தொடர்ச்சியாக தங்களது அமெரிக்க வீசாக்களை புதுப்பித்துக்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு அமெரிக்காவில் சொத்துக்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

44

 

SHARE