அரசியல்துறைப் பேராசிரியர் இராமு மணிவண்ணன்தமிழின அழிப்பு தொடர்பாக மற்றுமொரு ஆவணநூல் வெளியிடப்பட்டுள்ளது!

361

 

சென்னைப் பல்கலைக் கழக பொதுத்துறை மற்றும் அரசியல்துறைப் பேராசிரியர் இராமு மணிவண்ணன் எழுதிய SRI LANKA : Hiding the Elephant என்ற பெயரிலான தமிழினப்படுகொலை ஆவண நூலின் அறிமுக நிகழ்வு பிரான்சிலும் சுவிசிலும் இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் நிகழ்ந்த அறிமுக விழாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மகிந்தன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் இவ் ஆவண நுர்ல் அறிமுக நிகழ்வு நடந்துள்ளது.இதற்கு சமூக ஆர்வலர் கேசவன் மதிப்பீட்டுரையினை வழங்கியிருந்தார்.

சாட்சியங்கள், ஆதாரங்கள், புள்ளிவிபரங்கள், ஒளிப்படங்கள் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்களை தாங்கியுள்ள இந்த ஆவணம் அண்ணளவாக 900 பக்கங்களைக் கொண்டுள்ளது.ஆவணம் தொடர்பிலான மதிப்பீட்டுரை கருத்துரை ஏற்புரை கேள்வி பதில் ஆகியன இடம்பெற்றிருந்ததோடு தமிழகமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் எனும் கருப்பொருளில் கருத்தாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை சுவிஸ் நாட்டில் நிகழ்ந்த நூல் அறிமுக விழாவிற்கு நா.தமிழீழ அரசாங்கதின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தலைமை தாங்கியிருக்க மூத்த ஊடகவியலாளர் சண் தவராஜா அவர்கள் மதிப்பீட்டுரையினை வழங்கியிருந்தார்.

மூத்த செயற்பாட்டாளரும் அரசியல் விமர்சகருமாகிய கிருஸ்ணா அம்பலவாணர் தமிழகமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் எனும் கருப்பொருளில் கருத்துரையினை வழங்கியிருந்தார்.

இவ்விரு இடங்களிலும் இளையோர்கள் சமூக அரசியல் ஆர்வலர்கள் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் இந்நிகழ்வுகளில் பங்கெடுத்திருந்ததோடு தமிழினப்படுகொலை தொடர்பிலான முக்கிய ஆவணமாக இந்நூல் அமைந்துள்ள நிலையில் இதனை பல்கலைக்கழக மட்டங்களிலும் மற்றும் நூலகங்களுக்கும் கொண்டு செல்வதென பொதுமுடிவெடுக்கப்பட்டது.

 

SHARE