அரசியல் ரீதியாக எவரையும் பழிவாங்க தான் தயாரில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

491

அரசியல் ரீதியாக எவரையும் பழிவாங்க தான் தயாரில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் அரசியல் காரணங்களுக்காக நாட்டின் அபிவிருத்தியில் மாற்றங்களை செய்ய இடமளிக்க போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தன்னிச்சையாக வேலை செய்யாது, மக்களுக்கு கூடிய பிரயோசனம் கிடைக்கும் வகையில் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் இணைந்து உரிய திட்டத்தின் ஊடாக தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை செயற்படுத்த வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

விருப்பு வாக்குகளை எதிர்பார்த்து கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.

தேர்தலுக்காக சட்டத்தை கீழே தள்ளி விட்டு செயற்பட இடமளிக்க தயாரில்லை.

மக்கள் அரசியல்வாதிகளிடம் வழங்கியுள்ள பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றவேண்டும். அப்போது சட்டம் சரியான முறையில் நிறைவேறும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியாக எவரையும் பழிவாங்க போவதில்லை என்று ஜனாதிபதி கூறிய போதிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோர் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE