அரசுமாறினாலும்..! அட்டூழியம் மாறவில்லை..!-அம்பிளாந்துறையூர் அரியம்

352

 

சு(தந்திர)தினம்₹,
2015/பெப்ரவரி/04
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
அரசுமாறினாலும்..!
அட்டூழியம் மாறவில்லை..!
ஆட்சிமாறினாலும்..!
ஆக்கிரமிப்பு மாறவில்லை..!
இடம் மாறினாலும்..!
இடர் மாறவில்லை..!
ஈனம் மாறினாலும்..!
ஈரம் மாறவில்லை..!
உடை மாறினாலும்..!
உள்ளம் மாறவில்லை..!
ஊழல் மாறினாலும்..!
ஊதுகுழல் மாறவில்லை..!
எண்ணம் மாறினாலும்..!
எச்சம் மாறவில்லை..!
ஏணி மாறினாலும்..!
ஏக்கம் மாறவில்லை..!
ஐயர் மாறினாலும்..!
ஐயம் மாறவில்லை..!
ஒற்றன் மாறினாலும்..!
ஒட்டுண்ணிகள் மாறவில்லை..!
ஓணான் மாறினாலும்..!
ஓநாய்கள் மாறவில்லை..!
ஔடதம் மாறினாலும்..!
ஔவியம் மாறவில்லை..!
—அம்பிளாந்துறையூர் அரியம்–

SHARE