அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க தேர்தல்கள் செயலகம் தடை விதித்துள்ளது.
எந்தவொரு அரசாங்க அல்லது மாகாண சபை அலுவலகங்களிலோ, பாடசாலைகளிலோ உள்ளூர் அதிகார சபைகளினுள்ளோ, வேறு எந்த நிறுவனங்களிலோ ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பிரசாரங்கள் மேற்கொள்ளவும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்வதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டுமென அனைத்து அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள், மற்றும் தொழிற்சங்க செயலாளர்களுக்கு தெரிவித்துக் கொள்வதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது குறித்து நிறுவனங்களின் தலைவர்களும் கவனத்திற் கொள்வது முக்கியமானதொன்றாகும்.