அரச தொலைக்காட்சிக்கு ஆப்பு வைத்த ராஜபக்ஷ! 115 கோடி அறவிட முடியாக் கடன்

112
சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவினால் சுமார் 115 கோடி ரூபா கடன் பாக்கி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விளம்பரங்களை கடன் அடிப்படையில் சுயாதீன தொலைக்காடசி நிறுவனம் ஒளிபரப்பியிருந்தது. விளம்பரங்களுக்கும் மிகக் குறைவான கட்டணங்களே விதிக்கப்பட்டிருந்தன.

அவ்வாறிருந்தும் விளம்பரங்களுக்கான கட்டணத் தொகையான 115 கோடி ரூபாவை மஹிந்த தரப்பினர் பாக்கி வைத்துள்ளனர்.

தற்போது இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இது தொடர்பான சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.

 

SHARE