அர்ஜுனா விருதுக்கு ரோஹித் பரிந்துரை

302

இந்திய கிரிகெட் அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மாவின் பெயர் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நேற்று கொல்லத்தாவில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் 2015-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த ஜனவரி முதல் 21 போட்டிகளில் விளையாடி அவர், சராசரியாக 55.05 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 சதம் மற்றும் 5 அரை சதங்கள் அடங்கும்.

மேலும் புதிய பயிற்சியாளராக யாரை நியமிப்பது என்பது பற்றி இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டத்தில் விவதிக்கப்பட்டது. பின்னர் இது பற்றி டெண்டுல்கர், டிராவிட், கங்குலி ஆகியோரிடம் ஆலோசனை கேட்கவும் முடிவு செய்யப்பட்டதாக தெரியவந்துrohith 2ள்ளது.

SHARE