அலரிமாளிகையில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு இணங்கவே செயற்படுகின்றனர் என்று சிறிசேன குறிப்பிட்டுள்ளார் ஜனாதிபதி ஒரு மனிதராக செயற்படவில்லை!- மைத்திரிபால

422

 

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் அனைவரும் பெயருக்காக அமைச்சர்களாக உள்ளனர் என்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அமைச்சுக்களின் செயலாளர்கள், அமைச்சர்களை கேட்டு எதனையும் செய்வதில்லை.

அவர்கள், அலரிமாளிகையில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு இணங்கவே செயற்படுகின்றனர் என்று சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள் குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சுக்களின் செயலாளர்களது பணிகள், அலரிமாளிகையில் இருந்தே வரையறுக்கப்படுகின்றன.

இந்தநிலையில் ஊழல் மற்றும் துஸ்பிரயோகத்துக்கு எதிராக தாம் குரல் கொடுத்தபோது தமக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக சிறிசேன கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது மாறிவிட்டார்.

அவர் ஒரு மனிதராக செயற்படவில்லை. அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்றும் மைத்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

SHARE