அலவ்வ – ஹதரலியத்த பிரதேசத்தில் 16 வயதுடைய யுவதியின் சடலம் ஒன்று அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

164

 

அலவ்வ – ஹதரலியத்த பிரதேசத்தில் 16 வயதுடைய யுவதியின் சடலம் ஒன்று அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு தமது மூத்த சகோதரருடன் வர்த்தக நிலையத்திற்கு செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியேறினார்.

இதன்போது, வழியில் சில தரப்பினருடன் முறுகல் நிலை ஏற்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதன்பின்னர், யுவதியின் மூத்த சகோதரர் குறித்த தரப்பினரிடம் இருந்து தப்பி வீடு திரும்பியுள்ளார்.

எனினும், குறித்த யுவதி வீடு திரும்பியிருக்கவில்லை.
இதனையடுத்து, நிகழ்ந்த சம்பவத்தை யுவதியின் மூத்த சகோதரர் பெற்றோரிடம் விபரித்துள்ளார்.

இதன்பின்னர், நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, வெட்டு காயங்களுடன் உயிரிழந்திருந்த யுவதியின் சடலம் வீட்டிற்கு அருகாமையில் உள்ள தோட்டம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சடலம் மீட்கப்பட்ட தோட்டத்தின் காவலாளி மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

SHARE