அலியாவை பெண் கேட்டு மாப்பிள்ளை கூட்டம் கியூ 

375அலியாபட்டை மணந்துகொள்ள ஏராளமானவர்கள் அவர் வீட்டு எதிரில் காத்திருக்கின்றனர். பாலிவுட் இளம் நடிகை அலியா பட். இவருக்கும் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கும் காதல் என்று பரவலாக பேசப்படுகிறது. இதை இருவரும் உறுதியும் செய்யவில்லை. ஆனால் அவ்வப்போது வருணை நான் லவ் பண்றேன் என்று தன்னிடம் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களிடம் ஜோக் அடிக்கிறார் அலியாபட். இந்நிலையில் வருண் ஹீரோவாக நடிக்கும் ஹம்டி ஷர்மா கி துல்ஹனியா என்ற இந்தி படத்தில் பஞ்சாபி பெண்ணாக பாரம்பரிய பஞ்சாபி உடை அணிந்து எளிமையாக அவர் நடித்திருக்கிறார்.

 

இது பெரும்பாலான பெண்களை கவர்ந்திருக்கிறது. தனது மகனுக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருக்கும் பெண்கள் பலர் அலியாபட்டை தனது மருமகளாக்கி கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அலியாவின் தாயிடம் பெண் கேட்டு சம்பந்தம் பேச முயன்றனர். இதுகுறித்து அலியாவின் தாயார் சோனி ரஸ்தன் கூறும்போது, அலியாவை தன் மகனுக்கு பெண் கேட்டு பல சம்பந்தங்கள் வந்திருக்கின்றன.

 

ஆனால் அலியா இன்னும் சின்னப்பெண்தான். இந்த வயதிலேயே அவருக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணம் எனக்கு இல்லை என்றார். ஆனால் அலியாபட் சட்டப்படி திருமண வயதான 18ஐ கடந்து தற்போது 21வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

 

SHARE