அல்ஜீரியா விமானத்தின் சிதறல்கள் கண்டுபிடிப்பு

445

அல்ஜியர்ஸ் : சமீபத்தில் மாயமான, அல்ஜீரியா நாட்டு பயணிகள் விமானம், நைஜர் நாட்டில் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்ட, பர்கினோ பாசோ நாட்டிலேயே விழுந்து நொறுங்கியதாகவும், அதில் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

தொடர்பு துண்டிப்பு : ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவின் விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம், : னமும் நான்கு முறை, அதன் தென்பகுதியில் உள்ள மற்றொரு நாடான, பர்கினோ பாசோவுக்கு இயக்கப்பட்டு வந்தது. கடந்த வியாழனன்று பர்கினோ பாசோ நாட்டிலிருந்து, அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ் நகருக்கு, 116 பேருடன் புறப்பட்ட அந்த விமானம், அங்கிருந்து வடக்கு நோக்கி பயணித்தது; 50 நிமிடங்களில், மாலி என்ற நாட்டின் எல்லை அருகே பறந்து கொண்டிருந்தது. அப்போது பலத்த மழை பெய்தது. இதனால் வழக்கமான பாதையில் வராமல், வேறு பாதையில் வருமாறு, அல்ஜீரியா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு, அந்த, ‘ஏஎச்5017’ என்ற விமானத்திற்கு தகவல் கொடுத்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்த விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விமானம் மாயம் என்ற தகவல், சர்வதேச விமான போக்குவரத்து அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. நைஜர் நாட்டில் விமானத்தின் சிதறல்கள் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலை மறுத்த அல்ஜீரியா நாடு கூறியதாவது:

பர்கினோ பாசோ – மாலி நாட்டின் எல்லையிலேயே அந்த விமானம் விழுந்து நொறுங்கிக் கிடக்கிறது. அதன் சிதறல்களைப் பார்க்கும் போது, ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பது தெரிய வருகிறது; மோசமான வானிலை தான் விபத்திற்கு காரணம் என்பது முதற் கட்டமாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

கறுப்பு பெட்டி நொறுங்கிய அந்த விமானத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 51 பேர்

பயணித்ததால், அந்நாடு சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அல்ஜீரியாவில் பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கம் சற்று அதிகம் என்பதால், பிரான்ஸ் விமானப்படை வீரர்கள், விமானம் நொறுங்கி கிடந்த இடத்தை அடைந்து, கறுப்பு பெட்டியை கண்டுபிடித்து, மீட்டுள்ளனர்.

இந்த தகவலை தெரிவித்த பிரான்ஸ் அதிபர், பிரான்கோயிஸ் ஹோலாந்தே, ”விபத்தில் ஒருவர் கூட உயிர் பிழைக்க வில்லை,” என்றார்.

 

SHARE