அல்லைப்பிட்டியில் பாடசாலை செல்லும் 13 வயதேயான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 22 வயது வாலிபனை விளக்கமறியலில்

274

 

அல்லைப்பிட்டி மன்மதராசாவிற்கு நடந்த கதி

அல்லைப்பிட்டியில் பாடசாலை செல்லும் 13 வயதேயான  சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 22 வயது வாலிபனை விளக்கமறியலில் வைக்க யாழ் பெண்கள், சிறுவர் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

பாடசாலை சென்றுவரும் இந்த சிறுமியை அல்லும் பகலும் பின்தொடர்ந்து செல்லும் இந்த வாலிபன், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளான். அண்மையில் மாணவியுடன் அங்கசேஷ்டையும் புரிந்துள்ளான்.

சிறுமியின் பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டையடுத்து வாலிபனை கைது செய்த பொலிசார் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தியபோது இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

SHARE