அல்லைப்பிட்டி மண்டைதீவு வீதி சுமார் 50 வருடங்களாக திருத்தங்கள் இன்றி காணப்படுவதால் மேற்படி கிராமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பார்வையிட்டார் சிறீதரன் பா.உ.

308
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி – மண்டைதீவு போன்ற கிராமங்கள் தொன்மை வாய்ந்தவை பல்வேறு துறைரீதியாக காத்திரமான பங்களிப்பை மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் காலம்காலமாக கொடுத்து வருகின்றனர்.

இருந்த போதும் இந்த கிராம மக்களின் அவசிய தேவைகளின் ஒன்றான சுமார் ஒரு கிலோ மீற்றர் மாத்திரமே ஆன அல்லைப்பிட்டி மண்டைதீவு வீதி சுமார் 50 வருடங்களாக திருத்தங்கள் இன்றி காணப்படுவதால் மேற்படி கிராமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

பாதை திருத்தப்படாத காரணத்தால் அல்லைப்பிட்டி மக்கள் மண்டைதீவு வைத்தியசாலைக்கு செல்ல 9 கிலோ மீற்றர் பயணம் செய்ய துர்ப்பாக்கிய நிலைமையில் உள்ளனர்.

மேற்படி நான்கு இடங்களில் கடலரிப்பு ஏற்பட்டு பாதை குறுக்கறுக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேரடியாக சென்று மேற்படி வீதியை பார்வையிட்டுள்ளதுடன், அதற்கான நடிவடிக்கையை வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்புகொண்டு மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இங்கு கிராமத்தின் வாகீசம் சனசமுக நிலையத்தினரும் பிரசன்னமாகியிருந்தனர்.

SHARE