அளுத்கம சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் இரு வாரங்களில் நிறைவு பெறும்: 20 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன. பொலிஸ் பேச்சாளர்

508
அளுத்கம சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் இரு வாரங்களில் நிறைவு பெறும்:  20 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன. பொலிஸ் பேச்சாளர்
அளுத்கம, பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் தீவைப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நிறைவு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

குறித்த பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து 20 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன.

சம்பவங்கள் தொடர்பில் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 30 பேர் கைது செய்யப்படவுள்ளனர் எனவும் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டார்.

SHARE