அவுஸ்திரேலியாவில் மண்ணை கவ்வும் இங்கிலாந்து: சவால் விடும் மெக்ராத்

299
இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் மோதப் போகும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 5-0 என ஒயிட் வாஷ் ஆகும் என முன்னாள் பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் கூறியுள்ளார்.கடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 5-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவிடன் தொடரை பறிகொடுத்தது. இதைத் தொடர்ந்து நடைபெறவுள்ள தொடரிலும் இங்கிலாந்து அதே மாதிரி தோல்வியைத் தழுவும் என மெக்ராத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து இடையே நடக்கும் இந்த டெஸ்ட் தொடர், யூலை – ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளன் மெக்ராத் கூறுகையில், அவுஸ்திரேலியாவுடன் மோத விரும்பும் அணிகள் கடுமையான மோதலுக்குத் தயாராக இருக்க வேண்டும்.

இங்கிலாந்திடம் நம்பிக்கை மட்டுமே உள்ளது. அதனால் உலகக்கிண்ணத்தில் அது பரிதாபமாக வெளியேற்றப்பட்டது. ஆனால் அவுஸ்திரேலிய வீரர்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகி்றார்கள்.

இங்கிலாந்து அணியை அவுஸ்திரேலிய மண்ணில் சந்திக்க ஆர்வமாக உள்ளேன். கடந்த தொடரின் போது 5-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா வென்றிருந்தது.

எனவே இந்த முறையும் சேர்த்தால் அது 10-0 என்றாகி விடும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

SHARE