அவுஸ்திரேலியா, குயின்ஸ் லெண்ட் மாநிலத்தில் உள்ள மனோர என்னும் இடத்தில் ஒரு வீட்டுக்குள் இருந்து 18 மாதம் தொடக்கம் 15 வயது வரைக்கும் இடைப்பட சிறுவர்கள் 8 பேர் சடலமாக மீட்கப் பட்டுள்ளனர்.
இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக முதல் கட்ட விசாரணைகள் நடத்தப்படுவதாக குயின்ஸ் லாண்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த வீட்டில் பலத்த காயங்களுடன் 34 வயது மதிக்கக் தக்க பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.